அரியலூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்கும், அவற்றை திரும்பப் பெறுவதற்கும் வசதியாக, வரும் 22.11.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.