அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சி நிலவுகிறது. 454 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்துக்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷியா, சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் வந்து செல்கின்றன. இவை ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரையில் இங்கு தங்கிச் செல்கின்றன.