அரியலூர்: அரிய வகை பறவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

671பார்த்தது
அரியலூர்: அரிய வகை பறவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், அரிய வகை பறவைகள் உட்பட மொத்தம் 47 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 7 ஆயிரம் இருந்த பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாவட்ட வனத்துறை அலுவலர் கூறுகையில், இந்த ஆண்டு நீர்நிலைகள் அதிகமாக இருந்ததாலும்,பறவைகளுக்கான உணவுப் பொருட்கள் அதிக அளவில் கிடைத்ததால்தான் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி