அரியலூர்: சீர் மரபினர் நல வாரியத்தில் சேர அழைப்பு

80பார்த்தது
அரியலூர்: சீர் மரபினர் நல வாரியத்தில் சேர அழைப்பு
அரியலூர் மாவட்டத்தில் சீர் மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, விபத்து உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, சீர் மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக சேராதவர்களுக்கு வரும் 11ஆம் தேதி அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி