அரியலூர் கல்கெடர் முக்கிய அறிவிப்பு

0பார்த்தது
அரியலூர் கல்கெடர் முக்கிய அறிவிப்பு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்டங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் TNPSC, TNUSRB, TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு 27.05.2026 (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தொடங்குகின்றன. பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு வேலையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.