அரியலூர் மாவட்டம் ஓ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ காமன் திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில்களைப் புதுப்பித்து, யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிவாச்சாரியார்கள் மூலம் விமானம் மற்றும் மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஓட்ட கோவில், நல்லாம்பத்தை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.