அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க உள்ளனர். இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இன்றி, டிசம்பர் 1 முதல் அதை அமல்படுத்தியதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த புறக்கணிப்பு மூலம் நீதித்துறை பணிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.