அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அரியலூரில் உள்ள பல்துறை வளாகத்தில் நவம்பர் 5-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர் வாலண்டினா புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மாவட்ட எஸ். பி விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.