அரியலூர்: குளித்து கொண்டிருந்தவர் மரணம்

0பார்த்தது
அரியலூர்: குளித்து கொண்டிருந்தவர் மரணம்
ஜெயங்கொண்டம், வடக்கு தெருவைச் சேர்ந்த 45 வயதான புகைப்படக் கலைஞர் சரவணன், சனிக்கிழமை வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி