அரியலூரில் அரசு பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அதிமுகவின் வாக்குறுதிகள்
திமுக திட்டங்களை காப்பியடிப்பதாக விமர்சித்தார். திமுகவின் மகளிருக்கு உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டங்களை நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் முதல்வர்
ஸ்டாலின் செயல்படுத்திக் காட்டியுள்ளதாகவும், தற்போது அதிமுக அதே திட்டங்களை செய்வதாக கூறுவது வேடிக்கையானது என்றும் அவர் கூறினார்.