ஆண்டிமடம் அருகே முனீஸ்வரன் (29) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு மணிகண்டன் (32) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி மணிமேகலை குற்றவாளி முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்த மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.