அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். மாசி மாதத்தின் சிறப்பு வாய்ந்த நாளான மாசி மகத்தன்று, இந்துக்கள் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் பிதுர் தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்தமான காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்டங்களை வைத்து வழிபாடு செய்து, பின்னர் அவற்றை ஆற்றில் கரைத்தனர்.