வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரியலூர் நகரில் மின் பாதையில் மரக்கிளைகள் உரசுவதால் ஏற்படும் மின்தடையை தவிர்க்கும் நோக்கில், மின்சார வாரிய ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் மின் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.