அரியலூர் நாகம்பந்தல் ஊராட்சியில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு அரசாணை வழங்கியுள்ளது. இருப்பினும், ஒரு சிலரின் தலையீட்டால் பணிகள் தடைபட்டுள்ளதாகவும், இதனால் கிராம மக்கள் பாதிப்படைவதாகவும் வேதனை தெரிவித்தனர். உடனடியாக பழைய தொட்டியை அகற்றி புதியதை அமைக்கக் கோரி, சேவை மைய கட்டிடத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.