அரியலூர் பெரியார் சிலை அருகே, மாவட்ட தமிழக அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.