அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இன்று முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 552 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.