அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தங்கும் சமூக நீதி விடுதிக்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி மாணவிகளிடம் போலீஸ் அக்காவினை அறிமுகப்படுத்தி, இத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கினார். மேலும், காவல் உதவி செயலி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள் 1098, 181 குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் மற்றும் பிற காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.