அரியலூர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ

360பார்த்தது
அரியலூர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ
அரியலூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, இன்று நுழைவுவாயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கல்லூரி முதல்வர் எஸ். மணிவண்ணன், என்.எஸ்.எஸ். அலுவலர் எம். அப்பூதியடிகள் மற்றும் துறைத் தலைவர்கள் கே. ஜோதிநாதன், அருண்குமார், வேலாயுத தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நெடுஞ்சாலைக்கு அருகில் கல்லூரி அமைந்திருப்பதால், நுழைவுவாயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.