அரியலூர்: ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
அரியலூர் ரயில் நிலைய வளாகத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிறுத்தப்பட்டுள்ள படிகளை உடனடியாக வழங்க வேண்டும், கடும் ஆள்பற்றாக்குறை, அதிக வேலை பளு, உதிரி பாகங்கள் இல்லாத நிலை போன்ற ரயில்வே நிர்வாகத்தின் அவல நிலைகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாமல், அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி