அரியலூர் நகரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக அலுவலகத்தில், சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஆங்கில வார்த்தைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் முழுமையற்ற நிலையில் உள்ள அந்த வார்த்தைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம், அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.