முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் மூலம், வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுர அடியில் ரூ. 2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டித்தரப்படும். இதில் மழை நீர் சேகரிப்பு வசதி மற்றும் 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியும் அடங்கும். இத்திட்டத்தில் பயனடைய, உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.