அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஜெயங்கொண்டம் பாமக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.