அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமத்தில், இருசக்கர வாகனம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்த மகன் மணிகண்டன், பெட்ரோல் ஊற்றி தந்தையை தீயிட்டு கொளுத்தியுள்ளார். தந்தை பிச்சப்பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.