அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நான்காவது நாளான பிப்ரவரி 13, 2026 அன்று வாலாஜாநகரம் கிராமத்தில் "போட்டித்தேர்வுகளும் அரசு வேலை வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தேர்தல் துணை வட்டாட்சியர் B. சரவணன், பல்வேறு போட்டித்தேர்வுகள், அவற்றிற்கு தயாராகும் முறைகள், மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கினார்.