தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் பணி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 484 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 23,623 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.