அரியலூர்: புகையிலை கடத்தல்.. ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் கைது

643பார்த்தது
அரியலூர்: புகையிலை கடத்தல்.. ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் கைது
செந்துறையை அடுத்த தோப்பேரி சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த செந்துறை காவல் நிலைய போலீஸார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 271 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்த காரை பறிமுதல் செய்தனர். காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமாராம் (23) மற்றும் லெட்சுமண் (27) ஆகியோரை போலீஸார் கைது செய்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் ராஜஸ்தானில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி