அரியலூர் அண்ணா சிலை அருகில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.