அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் திறனகம் தொடக்க விழா காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 23 மாவட்டங்களில் திறனகங்கள் தொடங்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக அரியலூரிலும் இன்று திறனகம் தொடங்கப்பட்டது.