அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், குறள் வார விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான குறள் ஒப்புவித்தல் மற்றும் குறள் ஓவியப்போட்டி மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் குறள் ஒப்புவித்தல் போட்டியில் 21 பேரும், குறள் ஓவியப்போட்டியில் 20 பேர் என மொத்தம் 41 பேர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.