செந்துறை பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (20) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, செந்துறை காவல்துறையினர் அவரை சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.