அரியலூர்: கள்ளக்காதலன் வீட்டில் பெண் தற்கொலை

1440பார்த்தது
அரியலூர்: கள்ளக்காதலன் வீட்டில் பெண் தற்கொலை
அரியலூர் மாவட்டம், நக்கம்பாடியைச் சேர்ந்த செல்வம் (34) துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (28) மற்றும் உறவினர் ராஜா (33) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கணவர் அனுப்பிய பணத்தை ராஜாவிடம் பிரியா கொடுத்திருந்த நிலையில், துபாயிலிருந்து கணவர் வரவிருந்ததால் பணத்தை கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜாவின் வீட்டில் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ராஜா இதுகுறித்து போலீசில் சரணடைந்து, தகராறுக்கு பின் வெளியே சென்றதாகவும், அப்போது பிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி