அரியலூா்: குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

1பார்த்தது
அரியலூா்: குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா். முத்துசோ்வாமடம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளா் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் கடந்த 4 மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடர்புடைய செய்தி