அரியலூர்: முதல்வருக்கு கோரிக்கை வைத்த பெண்கள்

0பார்த்தது
ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வட வீக்கம் பகுதியில் அருகருகே உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் பாட்டில் பொறுக்கச் செல்வதாகவும், சிறு வயதிலேயே தீய பழக்கத்திற்கு ஆளாவதாகவும் கூறி, சாலையின் குறுக்கே கருவேல முட்களைப் போட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடையைத் திறக்க விடமாட்டோம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "விஜய் அண்ணா எங்களுக்கு தாய் மாமன் சீர் வேண்டாம், டாஸ்மாக் கடையை மூடினாலே போதும்" என பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி