பெரம்பலூர் அருகே கட்டடத் தொழிலாளி மணிகண்டன் (25), செவ்வாய்க்கிழமை வேலை முடிந்து தனது மனைவி மற்றும் மகனைப் பாா்ப்பதற்காக விளாமுத்தூருக்குச் சென்றார். பெரம்பலூர்- விளாமுத்தூர் சாலையில் சுற்றுலா மாளிகை அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.