ஜெயங்கொண்டம் அருகே குறுக்குரோடு மேம்பாலத்தில் இருந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி கீழே குதித்து தலையில் பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தார்.விசாரணையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருள்மொழிதேவன் ரைஸ் மில் தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகன் குகன்ராஜ் (20) என்பதும், அவர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் டி ஃபார்ம் படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இன்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவருக்கு நேர்ந்த இந்த சோகம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.