அய்யனார் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

164பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தில் உள்ள அருள்மிகு அய்யனார் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இவ்விழாவில், இரண்டு கால யாக பூஜைகள் மற்றும் புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனாரை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி