அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழராயபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், நல்லப்பா சுவாமி, வீரபத்ர சுவாமி, சப்த கன்னிகள், ஏம கருப்புசுவாமி பரிவார தெய்வங்களுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி, கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.