அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில், யூத் ரெட் கிராஸ் கல்லூரி மாணவர்களுக்கான போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மருத்துவர் சங்கரி பிரியதர்சினி, போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் குறித்தும், தற்கொலையைத் தவிர்த்து மனநலத்தைப் பேணுவது குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.