அரியலூர் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வ

0பார்த்தது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. பேரணியில் குழந்தை திருமணத்தை தடுப்போம், குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை தடுப்போம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you