அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு கூட்டாண்மை ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் ஊட்டச்சத்து உடல்நலம் தன் சுத்தம் பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்தின சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.