அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பரணம்குமிழியம் கிராமத்தில் நூற்றாண்டுக்கு மேல் பழமையான அருள்மிகு பூர்ணா தேவி புஷ்பகலா தேவி சமேத ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ குள்ள கருப்பு ஸ்ரீ வீரன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு பழைய கோவில் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.