அரியலூரில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில், அரியலூர் சட்டமன்றத் தொகுதி பாஜகவின் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாரப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சட்டமன்ற தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.