அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் புத்தக திருவிழா தொடங்குகிறது. இதற்காக அரங்குகள், மின் இணைப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியர் ரத்தினசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புத்தக அரங்குகளில் மேற்கொள்ளப்படும் மின் இணைப்பு பணிகளை கவனமாக கையாள வேண்டும். உயர் மின்னழுத்தம் தாங்கக்கூடிய வகையில் மின் இணைப்புகளை வழங்கிட வேண்டும் என்றார்.