அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் 05.05.2026 அன்று சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் தமிழரசன் மற்றும் அகமது உசேன் கலந்துகொண்டனர்.