குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் இன்று (ஜூன் 12) நடைபெற்றது.
உறுதிமொழி நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன்., அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.