அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

0பார்த்தது
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரும் நெடுஞ்சாலைத்துறை ஊழியருமான திரு. செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அவர், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவதாகவும், குழந்தைகள் தேசத்தின் எதிர்கால தூண்கள் என்றும், கல்வி மூலம் அனைத்துத் துறைகளிலும் சாதித்து நாட்டிற்குச் சேவையாற்ற வேண்டும் என்றும் மாணவர்களை ஊக்குவித்தார்.