அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதலின் பேரில் மூட்டை மூட்டையாக மிளகாய், புடவைகள், மாதுளை, திராட்சை, கரும்பு போன்ற பழங்கள் மற்றும் 108 வகை மூலிகைகள் யாகத்தில் இடப்பட்டன. பின்னர் புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். யாகத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.