அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 திருக்கோயில்களில் இரவு நேரங்களில் பாதுகாவலராக பணிபுரிய 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.