பள்ளி வாகனங்கள் ஆட்சியர் ஆய்வு

0பார்த்தது
அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்களுக்கான கூட்டுக்குழு ஆய்வு இன்று (22.05.2026) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி வாகனங்களின் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். 67 பள்ளிகளைச் சேர்ந்த 420 வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன. குறைபாடுள்ள வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மறு ஆய்வுக்குப் பின்னரே இயக்க அனுமதிக்கப்படும். ஓட்டுநர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.