அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி வெளியிட்டார். இந்த இறுதி வாக்காளர் பட்டியலை அரியலூர் உடையார் பாளையம் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.